அநீதி இழைப்பு: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி


அநீதி இழைப்பு: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய ராஷ்டிரிய லோக் ஜனசக்தி
x
தினத்தந்தி 15 April 2025 6:37 AM IST (Updated: 15 April 2025 3:49 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

பாட்னா,

பீகாரை சேர்ந்த கட்சி ராஷ்டிரிய லோக் ஜனசக்தி. இக்கட்சியின் தலைவராக பசுபதி குமார் பாரா செயல்பட்டு வருகிறார். ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியிலும் இடம்பெற்றிருந்தது. பசுபதி குமார் முன்னாள் மத்திய மந்திரி ஆவார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பசுபதி குமார் நேற்று அறிவித்துள்ளார். தலித் கட்சி என்பதால் எங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பசுபதி குற்றஞ்சாட்டி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். அதேபோல், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய மந்திரி ஜித்தன் ராம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story