எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பயணி - காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்

ரெயிலுக்கும் நடைமேடைக்கு இடையே அப்பெண் சிக்கிக்கொண்டார்
எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பயணி - காப்பாற்றிய ரெயில்வே போலீஸ்
Published on: 

லக்னோ,

எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி விழுந்த பயணியை ரெயில்வே போலீஸ் காப்பாற்றினார்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் - டெல்லி இடையே பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

பயணியை மீட்ட ரெயில்வே போலீஸ்

இந்த ரெயில் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலில் இருந்து பெண் ஒருவர் கீழே இறங்க முயன்றார். அப்போது ரெயிலின் சக்கரத்திற்கும் நடைமேடைக்கு இடையே அப்பெண் சிக்கிக்கொண்டார்

அப்போது, அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் துரிதமாக செயல்பட்டு ரெயிலில் இருந்து கீழே விழுந்த பெண் பயணியை பத்திரமாக மீட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com