வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட வடைக்குள் பெரிய உலோக போல்ட் : பயணி அதிர்ச்சி

பயணியின் புகாருக்கு பதிலளித்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம், ஏற்பட்ட சிரமத்திற்கு மனமார்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரெயிலில் வழங்கப்பட்ட வடைக்குள் பெரிய உலோக போல்ட் : பயணி அதிர்ச்சி
Published on: 

பெங்களூரு,

பெங்களூருவில் இருந்து பெலகாவி நோக்கி சென்ற வந்தே பாரத் விரைவு ரெயிலில், சமர்த் கோடியால் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அவருக்கு காலை உணவாக வழங்கப்பட்ட வடையை சாப்பிட முயன்றபோது, அதற்குள் பெரிய அளவிலான உலோக போல்ட் ஒன்று கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

சமூக வலைதள பதிவு

இதனையடுத்து, அந்த உணவு மற்றும் உலோக போல்ட்டின் புகைப்படங்களையும், வீடியோவையும் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர், ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் இந்திய ரெயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

வருத்தம் தெரிவித்த ஐ.ஆர்.சி.டி.சி

இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், பயணியின் புகாருக்கு பதிலளித்துள்ள ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம், ஏற்பட்ட சிரமத்திற்கு மனமார்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட உணவு சேவை வழங்குநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆய்வு

இதனிடையே, நிலையான இயக்க நடைமுறைகளை சமையலறை ஊழியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அலட்சியங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, உணவு தயாரிப்பை தொடங்குவதற்கு முன்பு சமையலறையை முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து உபகரணங்களும் முறையாக சரிபார்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

X