மனைவியின் தவறான தகவலால் ரெயிலின் கழிவறையில் 2 நாட்களாக கிடந்த பயணியின் உடல்

புதுடெல்லியில் மனைவி அளித்த தவறான தகவலால் ரெயிலின் கழிவறையில் பயணியின் உடல் 2 நாட்களுக்கு மேல் கிடந்துள்ளது.
மனைவியின் தவறான தகவலால் ரெயிலின் கழிவறையில் 2 நாட்களாக கிடந்த பயணியின் உடல்
Published on

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் கான்பூரில் இருந்து துண்ட்லா நோக்கி சஞ்சய் அகர்வால் என்பவர் கடந்த 24ந்தேதி பாட்னாவில் இருந்து கோடா நகருக்கு செல்லும் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் பயணம் செய்து உள்ளார்.

ரெயிலில் ஏறிய பின் கழிவறையில் இருந்து மனைவிக்கு மொபைல் போன் வழியே அவர் தொடர்பு கொண்டுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததுபோல் இருக்கிறது என கூறியுள்ளார். அதன்பின் அவரை மனைவியால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளை சஞ்சயின் மனைவி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில், கோடா நகரை அடைந்த ரெயில் 40 நிமிட இடைவெளிக்கு பின் பாட்னா நகருக்கு திரும்பி செல்ல தொடங்கியது.

அதன்பின் பாட்னா நகரில் எஸ்1 பெட்டியில் 27ந்தேதி அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

சஞ்சயின் மனைவி அதிகாரிகளிடம் தவறான ரெயில் எண்ணை தந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 13239 என்பதற்கு பதிலாக 13237 என்ற எண்ணை அளித்துள்ளார்.

இதேபோன்று சஞ்சய் படுக்கை வசதி பெட்டியில் பயணித்துள்ளார். ஆனால் அவரது மனைவி குளிர்சாதன வசதி பெட்டியில் கணவர் இருக்கிறார் என கூறியுள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com