மதமாற்றத்தில் ஈடுபடுபட்டதாக மதபோதகர் கைது


மதமாற்றத்தில் ஈடுபடுபட்டதாக மதபோதகர் கைது
x

கைது செய்யப்பட்ட மத போதகர் பிரேம் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் அக்பர்பூரில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் பிரமோத் குமார் என்பவர் மதபோதகராக உள்ளார்.

இந்நிலையில், பிரார்த்தனை மூலம் உடல் நோயை குணப்படுத்துவதாக கூறி இந்து மதத்தினரை கிறிஸ்தவ மதத்திற்கு பிரமோத் குமார் மத மாற்றம் செய்ய முயன்றதாக விஸ்வ இந்து போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மத போதகர் பிரமோத் குமாரை கைது செய்தனர். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையின்போது இந்து மதத்தை சேர்ந்த 200 பேர் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவர்கள் தங்கள் மதத்தை கைவிட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற பிரேம் குமார் பிரார்த்தனை செய்ததாகவும் போலீசாரின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மத போதகர் பிரேம் குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.

1 More update

Next Story