குஜராத்: படேல் இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் சாயம் பூசிக்கொள்கிறது - அமித் ஷா

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரால் நடத்தப்படும் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் அரசியல் சாயம் பூசிக் கொள்வதாக பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.
குஜராத்: படேல் இட ஒதுக்கீடு போராட்டம் அரசியல் சாயம் பூசிக்கொள்கிறது - அமித் ஷா
Published on

அகமதாபாத்

அப்போராட்டம் மெதுவாக ஒரு கட்சியின் பக்கம் சாய்வதாக அவர் மறைமுகமாக காங்கிரஸ்சை சுட்டிக்காட்டி கூறினார்.

மாநில சட்டசபை தேர்தல் நெருங்கும் போது அப்போராட்டம் அரசியல் சாயத்தைப் பூசிக் கொள்வதாக அவர் கூறினார். அமித் ஷா கட்சி கூட்டம் ஒன்றில் இளைஞர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தப் போது இவ்வாறு கூறினார். படேல் போராட்டத்தின் நாயகரானா ஹர்திக் படேலிடம் சட்டபூர்வமான வழிமுறைகளை பின்பற்றி இட ஒதுக்கீடு பெறும்படி கூறினாலும் போராட்டத்தின் திசை மாறிவிட்டது.

போராட்ட விஷயத்தை கவனித்து வந்தால் அது குறிப்பிட்ட அரசியல் கட்சியினால் ஆதரிக்கப்படுவது நன்கு தெரியும். மக்கள் உணர்ச்சிகரமாக போராட்டத்தை ஆதரிக்கும் போது போராட்டத்தை நடத்துபவர்கள் ஒரு அரசியல் கட்சியை நோக்கி சாய்வது தெரிய வருகிறது. எந்த்வொரு சாதியும் மிகவும் பிற்பட்டவர் பட்டியலில் சேர்க்கப்பட அதற்குரிய ஆணையத்திடம் மனு அளிக்க வேண்டும். அந்த ஆணையம் பரிந்துரை அளித்தால்தான் அச்சாதியை பட்டியலில் சேர்ப்பார்கள்.

ஆனால் தேர்தல் நெருங்கும்போது அப்போராட்டம் அரசியலாக்கப்படுவது தெரிய வரும் என்றார் அவர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை கடக்க முடியாது. அதனால்தான் ஆணையத்தின் பரிந்துரை வேண்டும்.

அமித் ஷா இவ்வாறு பேசியதன் பின்னால் சமீபத்தில் ஹர்திக் படேல் தேர்தலில் காங்கிரஸ்சை ஆதரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக

சுட்டிக்காட்டியது இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் படேல்கள் கலவியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்பட்டோர் அந்தஸ்து கேட்டு போராடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com