பாட்லா ஹவுஸ் துப்பாக்கி சண்டை வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை; டெல்லி கோர்ட்டு உத்தரவு

கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.
முஜாகிதீன் பயங்கரவாதி அரிஸ் கான்
முஜாகிதீன் பயங்கரவாதி அரிஸ் கான்
Published on

அவற்றில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் டெல்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருந்தனர். அவர்களுக்கும், டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 2 இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் பலியானார்கள். மோகன்சந்த் சர்மா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் உயிரிழந்தா.

இதில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி அரிஸ் கான், 10 ஆண்டு தேடுதலுக்கு பிறகு, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிடிபட்டான்.

இந்த வழக்கு, டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இன்ஸ்பெக்டர் கொலை உள்ளிட்ட அரிஸ்கான் மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கடந்த 8-ந் தேதி நீதிபதி சந்தீப் யாதவ் அறிவித்தார்.

இந்தநிலையில், அரிஸ்கானுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சந்தீப் யாதவ் நேற்று உத்தரவிட்டார். இது, அரிதினும் அரிதான வழக்கு என்று நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com