உரிய நேரத்தில் வரியை செலுத்துங்கள்: மக்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரிக்கை

உரிய நேரத்தில் வரியை செலுத்த வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரிக்கை விடுத்துள்ளார். #SumitraMahajan
உரிய நேரத்தில் வரியை செலுத்துங்கள்: மக்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கோரிக்கை
Published on

தானே,

நாட்டுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த மக்களைவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், வரி செலுத்துவது, தேச கட்டமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அரசுக்கு உதவுவதாய் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலம் தானேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை துவக்கிவைத்த பின்னர், அந்த நிகழ்ச்சியில் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:- மக்கள் செலுத்தும் வரிகள் மூலமே அரசு தனக்கான வருவாயை பெறுகிறது. எனவே, உரிய வரியை செலுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும். அரசு தனது செலவுகளையும், மக்களுக்கு வழங்கும் பல்வேறு நலத்திட்டப்பணிகளுக்கான செலவையும் மக்கள் செலுத்தும் வரி மூலமே பூர்த்தி செய்கிறது. நாட்டை வலுவாக்க ஒவ்வொரு குடிமகனும் தேசத்தை கட்டமைப்பதை நோக்கி உழைக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com