பேடிஎம் நிறுவனரை கைது செய்து.. ஜாமீனில் விடுவித்த போலீஸ்.. ஏன் தெரியுமா?

இந்தியாவின் டிஜிட்டல் பணபரிவர்த்தனை செயலியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பேடிஎம் நிறுவனரை கைது செய்து.. ஜாமீனில் விடுவித்த போலீஸ்.. ஏன் தெரியுமா?
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனமாக பேடிஎம் உள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா, கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு டெல்லி காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் வாகனத்தை தனது லேண்ட்ரோவர் சொகுசு காரைக் கொண்டு மோதியதாகவும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது, பிப்ரவரி 22ஆம் தேதி காவல்துறை வாகனம் மீது விஜய் சேகர் சர்மா தனது காரை மோதிய பின் அங்கிருந்து உடனடியாக தப்பியிருக்கிறார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணையில், அந்த காரை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஓட்டிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து விஜய் சேகர் சர்மா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி பிரிவு 279 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், அதே நாளில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com