டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி அமைதிப்பேரணி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மீண்டும் இளைஞர்கள் பேரணி அறிவிக்கப்பட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் 5-ம் தேதி அமைதிப்பேரணி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, செப்டம்பர் 5-ந் தேதி புதுடெல்லியில் இளைஞர்கள் பேரணி நடத்தப்படும் என்று ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ அறிவித்துள்ளது. ஜூலை 25-ந் தேதி மாணவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு மத்திய அரசு அளித்திருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. செப்டம்பர் 5-ந் தேதி இந்தியா கேட் பகுதியில் இருந்து புறப்படும் பேரணி, புதுடெல்லி காவல்துறை தலைமையகம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், மத்திய அரசு ஜூலை 25-ந் தேதி இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்பதில் தேசிய செயற்குழுவுக்கு தீவிர சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.இதையடுத்து அமைதியான முறையில் போராட்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரும், ஜூலை 20-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இந்த பேரணிக்கு தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் மத்திய அரசு துரோகம் செய்யக்கூடாது” என்றும் சவுரவ் தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர் போராட்டம் முடிவுக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், மீண்டும் இளைஞர்கள் பேரணி அறிவிக்கப்பட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com