கேரளா: நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்த எம்.எல்.ஏ. மரணம்

மேடையிலேயே திடீரெனமயங்கி கீழே விழுந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரளா: நிகழ்ச்சி மேடையிலேயே மயங்கி விழுந்த எம்.எல்.ஏ. மரணம்
Published on

மூணாறு,

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. வாலூர் சோமன். இவர் நேற்று மாலை பீர்மேடு பகுதியில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது மேடையிலேயே திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ. வாலூர் சோமன் இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com