பெகாசஸ் விவகாரம்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
பெகாசஸ் விவகாரம்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்
Published on

புதுடெல்லி,

எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் செல்போன்களை பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தபோது, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அதை மறுத்தது.

ஆனால் இஸ்ரேலிடம் இருந்து மத்திய அரசு இந்த மென்பொருளை வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தற்போது செய்தி வெளியாகி உள்ளது. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பொய் கூறிய மத்திய அரசு மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஷ்வினி வைஸ்ணவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தியின் அடிப்படையில் பார்க்கும்போது, மத்திய அரசு நாடாளுமன்றத்தையும், சுப்ரீம் கோர்ட்டையும் தவறாக வழிநடத்தியிருப்பதுடன், நாட்டு மக்களிடம் பொய் கூறியிருக்கிறது. எனவே பெகாசஸ் விவகாரத்தில் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய மத்திய மந்திரி அஷ்வினி வைஸ்ணவ் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com