சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு தகவல்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் சதவிகிதம் கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் சதவிகிதம் கடந்தாண்டை விட 0.65 சதவீதம் குறைந்துள்ளது. ஐகோர்ட்டுக்களில் வழக்குகள் நிலுவை 0.82 சதவீதமும், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவை 4.32 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில்,487 தேர்தல் வழக்குகள், ஆயிரத்து 295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள், 2 ஆயிரத்து 870 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மாநில உயர் நீதிமன்றங்களில் சுமார் 10 ஆயிரம் பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை ஐகோர்ட்டில் 18 தேர்தல் தொடர்பான வழக்குகளும், 69 ஆயிரத்து 5 ரிட் வழக்குகளும் நிலுவையில் உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com