குஜராத்: கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த சுவர் - இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்...

குஜராத்தில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்: கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த சுவர் - இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்...
Published on

காந்திநகர்,

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வணிக வளாக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த கட்டிடத்திற்கான சுவர் அமைக்கும் பணிகளும் இன்று நடைபெற்று வந்தது. இந்த பணியில் 5-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் செய்துவந்துள்ளனர்.

இந்நிலையில், கட்டுமான பணியின் போது கட்டிடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுவர் இடிந்து விழுந்ததால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 6 பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com