பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஆமதாபாத்திற்கு பாதயாத்திரையாக திரண்டு வந்த மக்கள்

பிரதமர் மோடி ஆமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஆமதாபாத்திற்கு பாதயாத்திரையாக திரண்டு வந்த மக்கள்
Published on

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினம், அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி இதனை துவக்கி வைக்கிறார்.

இதுதவிர, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி 21 நாட்கள் நடை பயண இயக்கத்தையும், மோடி துவக்கி வைக்கிறார். நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் எம்.பி.க்களும், அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆமதாபாத் நகரின் அபய் காட் பகுதிக்கு பாதயாத்திரையாக மக்கள் திரண்டு வந்துள்ளனர். பிரதமர் மோடி ஆமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் ஆசிரமத்தில் ஹிருதய் குஞ்ச் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி புகைப்படத்திற்கும் மலர்மாலை சூட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com