பிரதமர் மோடி வாகன பேரணியை காண வீட்டு பால்கனியில் திரண்ட மக்கள்

பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் இருந்தனர்.
பிரதமர் மோடி வாகன பேரணியை காண வீட்டு பால்கனியில் திரண்ட மக்கள்
Published on

பாட்னா,

பிரதமர் மோடி பீகாரின் பாட்னா நகரில் இன்று மாலை வாகன பேரணியில் ஈடுபட்டார். அவரை பார்ப்பதற்காக, பொதுமக்கள், கட்சியினர், தொண்டர்கள் என பலரும் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் மூவர்ண கொடியை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் பிரதமரை வரவேற்பதற்காக வழி முழுவதிலும் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியில் இருந்த வீடுகளில் வசித்து வரும் மக்கள், வீடுகளின் மேற்கூரைக்கும் மற்றும் பால்கனிக்கும் சென்று அவரை பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தபடியே காரில் சென்றார்.

அவர் பாட்னா நகரில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை புதிய முனைய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து உள்ளார். ரூ.1,200 கோடி மதிப்பிலான இந்த கட்டிடம், ஆண்டுக்கு 1 கோடி பயணிகளுக்கு சேவையை வழங்கும்.

அவருடன் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com