தெலுங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது.. பிரதமர் மோடி பிரசாரம்

தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக சாடினார்.
தெலுங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது.. பிரதமர் மோடி பிரசாரம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானாவில் வரும் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவை பொறுத்தவரை அந்த மாநிலம் உதயமானது முதல் தொடர்ந்து இரண்டு முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சந்திரசேகர் ராவ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளார். 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் இந்த முறை பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது.

தெலுங்கானாவில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மாநிலத்தில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக சாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: தெலுங்கானாவில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது. பி.ஆர்.எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியால் சலிப்படைந்த மக்கள் அதில் இருந்து விடுதலை பெறவிரும்புகின்றனர்.

மஞ்சள் வாரியம் உள்பட சொன்னதை நிறைவேற்றும் பாஜகவின் சாதனைகளை மக்கள் பார்க்கின்றனர். மடிகா சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை பாஜகவால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அநீதிக்கு முடிவு கட்ட இந்திய அரசு தீர்க்கமாக உள்ளது. குழு ஒன்று அமைக்கப்பட்டு விரைவில் பிரச்சினைகள் தீர்க்கப்படும். பாஜக சொல்வதை செய்யும். பாஜகவின் கடந்த கால வரலாறுகளை மக்கள் பார்த்து இருக்கின்றனர்.  முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வருவோம் என நாங்கள் சொன்னோம். அதன்படியே நிறைவேற்றினோம். ராமர் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தோம். அதுவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என்றார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com