இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

அரசியலாக பார்க்கவில்லை என்றால் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டியது தானே என்று கவர்னர் தமிழிசை கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி,

தெலங்கானா கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் சேலம் மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்கள் பாஜகவினர் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், "இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தான் இந்துக்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் ஏன் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கிறார்கள்? அரசியலாக பார்க்கவில்லை என்றால் அழைப்பு வந்தால் போக வேண்டியது தானே!

அவர்கள் அதை அரசியலாக பார்க்கிறார்கள். புறக்கணிப்பவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். சொந்த இடத்திற்கு ராமர் திரும்புகிறார். தமிழகத்திற்கும் ராமர் திரும்பி வருவார். எந்த ராமரை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்தீர்களோ அதே ராமர் தமிழகத்தில் வந்து தன்னை நிலைநிறுத்த போகிறார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com