

புதுடெல்லி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. தோல்வி எதிரொலி காரணமாக நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கான்பூரில் கிரிக்கெட் வீரர்கள் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் டோனி வீட்டிற்கு முன் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.