எரிபொருள் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; மம்தா பானர்ஜி

நாட்டில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வலியுறுத்தி உள்ளார்.
எரிபொருள் விலையை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்; மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

இதனால் கடந்த ஒரு வாரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. பெட்ரோல் விலை ரூ.80ஐ கடந்து விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் உயர்ந்து வருகிறது. விவசாயம், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இந்த சுமையை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கு தீர்வு ஏற்பட கூடிய தீவிர நடவடிக்கைகள் எதனையும் மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை? அவர்கள் செயல்பட வேண்டிய தேவை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பல்வேறு இடங்களில் பேரணிகளில் ஈடுபட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com