கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்...!

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்...!
Published on

யாதகிரி,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டால் ஆபத்து என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி குறித்து மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் அருகே உள்ள காந்தி சவுக், சக்கரகட்டி, கொல்லவாடே ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது கொல்லவாடே கிராம மக்கள் அதிகாரிகளை பார்த்ததும், கொரோனா தடுப்பூசி போட பயந்து கிராமத்தை விட்டே வெளியேறினர். அதிகாரிகள் அவர்களை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆனாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த அவர்கள், தடுப்பூசி போடுவதாக இருந்தால் ஊரை விட்டே செல்கிறோம் என்றனர்.

இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல, காந்தி சவுக் பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தடுப்பூசி போட அழைத்தனர். அப்போது, அதிகாரிகளை பார்த்ததும், நடைபாதை வியாபாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com