வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்

வருகிற நடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறினார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவார்கள்
Published on

மைசூரு

பா.ஜனதா வளர்ச்சி

மைசூரு டவுன் மிருக காட்சி எதிரே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் மைசூரு-குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை வளர்க்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பாடுபட்டார். இன்று இந்த அளவிற்கு கர்நாடகத்தில் பா.ஜனதா வளர்ந்ததற்கு காரணம் எடியூரப்பா தான்.

அவர் கட்சியில் எந்த முடிவு எடுத்தாலும் சரியாக தான் இருக்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்க எடியூரப்பா முடிவு எடுத்துள்ளார். இது அவரின் தனிப்பட்ட முடிவு கிடையாது.

மகிஷா தசரா

பா.ஜனதா மேலிடம் கூறிதான் எடியூரப்பா கூட்டணி குறித்து பேசி இருக்கிறார். இதற்கு நான் ஒத்துழைப்பு அளிக்கிறேன்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறிவித்த 5 உத்தரவாத திட்டங்களால் மக்கள் ஏமாந்து வாக்களித்து உள்ளார்கள். தற்போது காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு வாக்களித்தோம் என மக்கள் புலம்பி வருகிறார்கள்.

எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள். இந்த ஆண்டு மகிஷாசூரன் விழாவை சாமுண்டி மலையில் ஆடம்பரமாக கொண்டாட தசரா கமிட்டி முடிவு செய்துள்ளது.

சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா கொண்டாடுவதை நான் எதிர்க்கிறேன். இவ்வாறு பிரதாப் சிம்ஹா எம்.பி. கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com