சென்னை-பெங்களூரு உள்பட 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தொழில்துறை இணை மந்திரி சோம் பர்காஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை-பெங்களூரு உள்பட 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு அனுமதி - மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சோம் பர்காஷ் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது அவர், நாடு முழுவதும் 11 தொழில்துறை வழித்தடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக கூறினார். இவற்றில் 32 திட்டங்களும் அடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

இதில் சென்னை-பெங்களூரு, டெல்லி-மும்பை, அமிர்தசரஸ்-கொல்கத்தா ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை என்று கூறிய சோம் பர்காஷ், இந்த வழித்தடங்கள் 4 கட்டங்களாக அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இவற்றில் சில வழித்தடங்கள் கருத்துருவாக்கம், வளர்ச்சி மற்றும் செயல்படுத்தலின் பல்வேறு நிலைகளில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com