

திருவனந்தபுரம்,
குருவாயூர் தேவஸ்தான தலைவர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குருவாயூர் கோவிலில் தினசரி தரிசனத்திற்கு தற்போது 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் முன்பதிவு செய்யும் பலர் தரிசனத்திற்கு வருவதில்லை.
இதனை கருத்தில் கொண்டு, கூடுதல் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் தினசரி 100 திருமணங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றி குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களுடன் திருமணத்தை நடத்தவும் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று ஒரே நாளில் 88 திருமணங்கள் நடந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.