

மும்பை,
தானே கடற்கரை சாலைத் திட்டப்பணிகளுக்காக 680 மரங்களை வெட்டக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
மராட்டிய மாநிலம் தானே முல்லுண்டு கிழக்கு ஆனந்த் நகர்- தானேயில் பால்கும் இடையே 7.12 கி.மீ. தூரத் துக்கு தானே கடற்கரைச் சாலை 2-ம் கட்டத் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. முதல் கட்ட மாக தானே காய்முக்காஷெலி பாலம் வரை கடற்கரைச்சாலைத் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
தானே கடற்கரைச் சாலைத் திட்டப்பணிகளை மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில் தானே கடற்கரைச் சாலை 2-ம் கட்டப்பணிகள் நடைபெற உள்ள 1.7 ஏக்கர் மாங்குராவ் வனப்பகுதியில் மொத்தம் 3 ஆயிரத்து 754 மரங்கள் உள்ளன.
இதில், 2 ஆயிரத்து 21 மரங்களுக்கு திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1,053 மரங்கள் கட் டுமானப் பணிகளின் போது சேதமடைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்காக தூண்கள் அமைய உள்ள இடத்தில் உள்ள 680 மரங்கள் நிரந்தரமாக வெட்டப்பட உள்ளன.
இதற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கி உள்ளது. தானே கடற்கரைச் சாலைத் திட்டம் மூலம் தானே நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும் திட்டப்பணிகள் தொடங்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இறுதி ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.