

புதுடெல்லி,
கடந்த ஏப்ரல் 15-ந் தேதியில் இருந்து, 2 மணி நேரத்துக்கு குறைவான பயண நேரம் கொண்ட உள்நாட்டு விமானங்களில் உணவு வழங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்து இருந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த கட்டுப்பாட்டை விதித்தது.
இந்தநிலையில், பயண நேர கட்டுப்பாடு இன்றி, அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் உணவு வழங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு மீண்டும் வார, மாத பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.