தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி

தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் புதிதாக ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பங்களிப்போடு அமைக்கப்படும் இந்த மருத்துவ கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மே 6-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com