பினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு

கேரள முதல்-மந்திரி, அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
Published on

திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீனா, மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தாது மணல் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுவது குறித்து பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி எர்ணாகுளத்தைச் சேர்ந்த கிரீஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவை விஜிலன்ஸ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் கிரீஷ் பாபு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில் தாது மணல் நிறுவனத்திடம் இருந்து பினராயி விஜயனின் மகள் வீனா, ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக பினராயி விஜயன், அவரது மகள் வீனா உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com