குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி உத்தரபிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு
Published on

லக்னோ:

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி உத்தரபிரதேச ஷியா மத்திய வக்புவாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வசீம் ரிஸ்வி தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்த வசனங்கள் "பயங்கரவாதம், வன்முறை, ஜிஹாத் ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன" என்றும் அவை உண்மையான குர்ஆனின் ஒரு பகுதியாக இல்லை, ஆனால் பின்னர் ஒரு காலத்தில் செருகப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரஹ்மானி ரிஸ்வி விளம்பரத்திற்காக இதனை செய்து உள்ளதாக கூறினார்.

மஜ்லிஸ்-இ-உலமா-இ-ஹிந்தின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவாத், ரிஸ்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். லக்னோவின் பரா இமாம்பராவுக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை குர்ஆனைப் பாதுகாப்பதற்காக ஒரு அரங்கையும் ஏற்பாடு செய்தார்.

இந்திய இஸ்லாமிய மையத்தின் தலைவர் மவுலானா காலித் ரஷீத் பரங்கிமஹாலி கூறும் போது "அல்லாஹ் தனது புனித நூலுக்குப் பொறுப்பேற்றுள்ளார், அதில் ஒரு எழுத்து அல்லது நிறுத்தற்குறி கூட உலக அழிவு நாள் வரை மாறாது . இதுபோன்ற கூற்றுக்களைச் செய்ய ரிஸ்வி யார்? அவரது மனுவை ஏற்றுகொள்ளக் கூடாது, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் அமைதிய சீர்குலைத்ததற்காக அரசு அவரை கைது செய்யவேண்டும் என கூறினார்.

ஷியா மற்றும் சன்னி மதகுருமார்கள் கூறும் போது

முகமது நபிக்கு பிறகு, முதல் கலீபா ஹஸ்ரத் அபுபக்கர், இரண்டாவது கலீபா ஹஸ்ரத் உமர் மற்றும் மூன்றாவது கலிப்பா ஹஸ்ரத் உஸ்மான் ஆகியோர் குர்ஆனை ஒரு புத்தகமாக வெளியிட்டனர், இது முகமது வாய்வழி பிரசங்கத்தின் அடிப்படையில் அடுத்த லைமுறைகளுக்கு அனுப்பப்பட்டது .

உண்மை கொண்டிருக்கும் அல்லாஹ்வின் புனித நூலான குர்ஆனில் கடந்த 1400 ஆண்டுகளில் அசல் குர்ஆனில் ஒரு வார்த்தை கூட மாற்றப்படவில்லை அல்லது சிதைக்கப்படவில்லை மறுமை ( இறந்தபின் ) பாதுகாப்புக்கு அல்லாஹ் உத்தரவாதம் அளித்த குர்அனில் மிகச்சிறிய நிறுத்தற்குறியைக் கூட மாற்ற முடியாது என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com