விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை 30% அதிகரிப்பு

விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசல் விலை 30% அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டா ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன்மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கான செலவு அதிகரித்துள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சாவதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சாவதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டா ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டா ரூ.105.95 ஆகவும் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com