

சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதால், பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. சர்வதேச சந்தையின் விலைக்கேற்ப தினமும் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த 13 ஆம் தேதி பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத்தொடங்கியது. 16 நாட்களாக தினமும் 20 காசு,30 காசு என அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், 17-வது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து உள்ளது. பெட்ரோல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.81.43 ஆகவும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.73.18 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.