

புதுடெல்லி,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்துள்ளதால், இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.110 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 0.35 காசுகள் உயர்ந்து ரூ.110.04 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று டீசல் விலை 0.35 காசுகள் உயர்ந்து ரூ.98.42 ஆக உயர்வடைந்து உள்ளது
இதேபோன்று, மும்பை நகரில் பெட்ரோல் ரூ.115.85 மற்றும் டீசல் ரூ.106.62 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பெட்ரோல் ரூ.110.49 மற்றும் டீசல் ரூ.101.56 ஆகவும், சென்னையில் பெட்ரோல் 106.66 மற்றும் டீசல் ரூ.102.59 ஆகவும் விற்கப்படுகிறது.