யுபிஐ மூலம் பி.எப். பணத்தை எடுக்கும் வசதி டிசம்பரில் அறிமுகம்

பிஎப் சந்தாதாரர்கள் இதற்கு என்னென்ன தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிட உள்ளது.
டிசம்பரில் அறிமுகம்
Published on: 

புதுடெல்லி,

யுபிஐ செயலிகள் மூலம் பிஎப் பணத்தை எடுக்கும் வசதி டிசம்பர் மாதம் அறிமுகமாகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) உறுப்பினர்கள் வசதிக்காகவும், வேகமாக சேவைகளை வழங்கவும் பல டிஜிட்டல் சீர்திருத்தங்களை அவ்வபோது அமல்படுத்தி வருகிறது. தற்போது, ​​பி.எப்.பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம்.

டிசம்பரில் அறிமுகம்

அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, பிஎப்யில் இருந்து எடுக்கப்படும் பணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வங்கியில் இருந்து நாம் பணத்தை எடுத்து கொள்ளலாம். தற்போது யுபிஐ செயலிகள் வாயிலாக பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சோதனை முறைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது. சந்தாதாரர்கள், அனுமதியோடு கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் பணத்தை எடுக்க முடியும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பணம் கிடைக்க வழிவகை

தற்போதைய விதிகளின்படி, பிஎப் இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும். கல்வி, திருமணம் மற்றும் வீட்டு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளுக்கு, ஒரு சந்தாதாரர் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம் என குறிப்பிடத்தக்கது.

இது நடைமுறைக்கு வந்தால், பிஎப் சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிஎப் தொகையை யூபிஐ மூலமாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். தற்போதுள்ள நடைமுறைப்படி, பிஎப் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் கோரிக்கை வைத்து, அது பரிசீலிக்கப்பட்டு, அதன்பிறகு வங்கி கணக்கிற்குப் பணம் வர சில நாட்கள் ஆகும். ஆனால், இந்த புதிய வசதியில் பணம் எடுக்கும் செயல்முறை மிகவும் எளிமையாக்கப்பட்டு உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

விரைவில் பிஎப் அமைப்பு எவ்வளவு பணத்தை யூபிஐ மூலமாக எடுக்கலாம், பிஎப் சந்தாதாரர்கள் இதற்கு என்னென்ன தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com