கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பு கலைப்பு - முக்கிய தலைவர் கைது

கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பு கலைக்கப்பட்டது.
கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பு கலைப்பு - முக்கிய தலைவர் கைது
Published on

கொல்லம்,

கேரளாவில் பி.எப்.ஐ. அமைப்பை கலைத்து விட்டதாக அதன் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த நாட்டில் சட்டத்தின்படி செயல்படுகிற குடிமக்களாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் முடிவை அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. பி.எப்.ஐ. கலைக்கப்பட்டு விட்டது என அதன் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

ஆனால் சிறிது நேரத்தில் அவர் கருநாகப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். கடந்த 23-ந்தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த பின்னர் அவர் தலைமறைவாக இருந்தார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com