இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு

இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுப்பதற்கு அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிற இந்த தடுப்பூசியை,, உலகிலேயே முதல்நாடாக இங்கிலாந்தில் பயன்படுத்துவதற்கு அங்குள்ள அரசு ஒப்பதலை வழங்கி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச்செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் குறித்து மத்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சு நடத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், இப்போது நாங்கள் உலகமெங்கும் உள்ள பல அரசுகளுடன் பேசி வருகிறோம். இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச்செய்வதற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கு இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பெருந்தொற்று காலத்தில் பைசர் தனது தடுப்பூசியை அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை அங்கீ காரம் மற்றும் ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com