மொபைல் பறிமுதல் : தனியுரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 4 இந்திய ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு

அரசியல் சாசனத்தின்படி தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளதாக இது குறித்து 4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
மொபைல் பறிமுதல் : தனியுரிமைகள் மீறப்பட்டுள்ளதாக 4 இந்திய ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு
Published on

புதுடெல்லி

கர்னல் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பொறுப்பில் உள்ள நான்கு ராணுவ அதிகாரிகள், உளவு விசாரணைக்காக அவர்களது மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் பொருட்கள் கைபற்றபட்டது.

அரசியல் சாசனத்தின்படி தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளதாக இது குறித்து 4 ராணுவ அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

அதிகாரிகளின் மனுவின்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகளில் இருவர் டெல்லியில் உள்ள இராணுவ புலனாய்வு (எம்ஐ) இயக்குநரகத்தில் பணி புரிந்துவருகின்றனர். மூன்றாவது நபர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ளார். நான்காவது அதிகாரி மும்பையில் பணியில் உள்ளார்

மனுவில் ராணுவ புலனாய்வு இயக்குனரகத்தின் (டிஜிஎம்ஐ) உத்தரவின் பேரில் மார்ச் மாதம் ராணுவ அதிகாரிகளால் தங்களின் மொபைல் போன்கள் மற்றும் பிற தனிப்பட்ட டிஜிட்டல் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக நான்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com