நடிகர் தர்ஷனுக்கு சிறையில் பிசியோதெரபி சிகிச்சை

நடிகர் தர்ஷனுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் தர்ஷனுக்கு சிறையில் பிசியோதெரபி சிகிச்சை
Published on: 

பெங்களூரு,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர் ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தீராத முதுகுவலி பிரச்சினையால் தர்ஷன் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக தனக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு 59-வது சிட்டிசிவில் கோர்ட்டில் தர்ஷன் சார்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டும், முதுகுவலியால் அவதிப்படும் தர்ஷனுக்கு பிசியோதெரபி மற்றும் பிற மருத்துவ சிகிச்சையை அளிக்க சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்படி, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நேற்று அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வந்த டாக்டர்கள் குழுவினர், நடிகர் தர்ஷனுக்கு பிசியோதெரபி சிகிச்சையும், முதுகுவலி சரியாக பிற மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளையும் வழங்கினார்கள். மேலும் அவரை ஓய்வெடுக்கும்படியும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் தர்ஷனை, அவரது மனைவி விஜயலட்சுமி சந்தித்து பேசினார். அதற்கு முன்பு அவர், பெங்களூருகாளி ஆஞ்சநேயசாமி கோவிலில் தர்ஷன் உடல் நலம் சரியாக சாமி தரிசனம் செய்திருந்தார். சிறையில் தர்ஷனை சந்தித்தபோது கோவில் பிரசாதத்தை விஜயலட்சுமி வழங்கிவிட்டு சென்றார்.

X