

புதுடெல்லி
அகமதாபாத் - ஜெய்ப்பூர் இடையிலான கோ-ஏர் பயணிகள் விமானம் சமீபத்தில் 30 நிமிடங்கள் தாமதமானது. காரணம் என்னவென்றால், புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைந்துள்ளது. அது விமானத்தினுள் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணிகள் அதனை வீடியோ எடுத்தனர். சிலர் அதனை பிடிக்கவும் முயன்றனர் ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
ஒரு வழியாக புறா வெளியேறிய பின்னரே விமானம் புறப்பட்டது. ஆனால் விமானத்தினுள் புறா வந்தது எப்படி என்பதற்கு தற்போது வரை விடைகிடைக்கவில்லை.
டுவிட்டர் பயனரான ராகேஷ் பகத் இந்த சம்பவம் குறித்த வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.