கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அதன் தொடர்ச்சியாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.

இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில், கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்று என அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளின் இருப்பு உறுதி செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு மற்றும் பிற அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

இந்த மனு நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று (செவ்வாய் கிழமை) விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com