மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு பினராயி விஜயன் கவலை

மறுவரையறையால் கேரளா போன்ற மாநிலங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு பினராயி விஜயன் கவலை
Published on

திருவனந்தபுரம்,

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு தென் மாநில அரசுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அந்தவகையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கவலை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படை யில் தாக்கல் செய்யப்படும் மசோதா மாநிலங்களின் உரிமைகளையும் சமத்துவ நீதிக் கோட் பாட்டையும் கணிசமாகப் பாதிக்கும்.

மாநிலங்களுடன் ஒருமித்த கருத்தை எட்டாமல், இத்த கைய ஒரு முக்கியப் பிரச்சினையில் மத்திய அரசு செயல்படுவது கவலையளிப்பதாக உள்ளது' என தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறையால் கேரளா போன்ற மாநிலங்கள் நேரடியாக பாதிக்கப்படும் எனக்கூறியுள்ள பினராயி விஜயன், மக்கள் தொகைக் கட்டுப்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் முன்னேறி, பொறுப்புடன் செயல்பட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படுகின் றன என்றும் சாடினார்.

இந்த சட்டத்தால் குறைக்கப்படும் பிரதிநிதித்துவத்தையும் குறைந்த பங் கையும் ஒரு நியாயமான கூட்டாட்சி ஏற்பாடாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com