களங்கம் நிறைந்த முதல்-மந்திரியாக பினராயி விஜயன் விளங்குகிறார் - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு

நாட்டில் வேலையின்மையால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.
களங்கம் நிறைந்த முதல்-மந்திரியாக பினராயி விஜயன் விளங்குகிறார் - கே.சி.வேணுகோபால் குற்றச்சாட்டு
Published on

திருச்சூர்,

திருச்சூரில் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:-

ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி மாணவிகளின் தலையை ஹெல்மெட் கொண்டு அடித்து உடைக்கும் நபர்களுக்கு மாநில அரசு விருது வழங்கி உலக சரித்திரத்தில் இல்லாத சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. இதனால் பினராயி விஜயன், மாநிலத்தின் களங்கம் நிறைந்த முதல்-மந்திரியாக விளங்குகிறார். இது கேரள மக்களுக்கு தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு குறித்து வாய் கிழிய பேசும் பா.ஜ.க. கட்சி, நாடாளுமன்றத்தை கூட காப்பாற்ற இயலாத நிலையில் உள்ளது. இதில் தொடர்புடைய பா.ஜனதா எம்.பி. மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அதனை தட்டி கேட்டு குறைகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்த சரித்திரம் பா.ஜனதாவுக்கு உள்ளது.

நாட்டில் வேலையின்மையால் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர் வர்க்கத்தின் எதிரி என்ற பெயரை மோடி எளிதாக பெற்று விட்டார். நாட்டில் வளர்ச்சி என்ற பெயரில் மதம் சார்ந்த விஷயங்களை ஆயுதமாக பயன்படுத்தி தேர்தலை பா.ஜ.க. சந்திக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com