வாடகை வீட்டில் குடியேறினார் பினராயி விஜயன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பினராயி விஜயனுக்கு ஒதுக்கப்பட்டது.
வாடகை வீட்டில் குடியேறினார் பினராயி விஜயன்
Published on

திருவனந்தபுரம்,

கேரளத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடம் பெறாததால் ஆட்சியை இழந்துள்ளது. இதனை தொடர்ந்து முதல்-மந்திரி பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவர் கேரள முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிப் ஹவுஸை காலி செய்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசிக்க முடிவு செய்தார். இதற்கிடையில் டெல்லி சென்ற அவர் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தை முடித்துவிட்டு நேற்று இரவு திருவனந்தபுரம் வந்த பினராயி விஜயன் பேக்கரி சந்திப்பில் உள்ள 2 மாடி வாடகை இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை முன்னாள் மந்திரியும் அவரது மருமகனுமான பி.ஏ.முகமது ரியாஸ் கட்சியின் மூத்த தலைவர் சிவன்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.

கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பினராயி விஜயனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்வு செய்தால் அப்பதவிக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்லமான கண்டோன்மென்ட் ஹவுஸில் அவர் குடியேற வாய்ப்பு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com