கேரளாவில் பரிதாபம்; பிரிந்து வாழும் மனைவியிடம் குழந்தைகளை ஒப்படைக்க மனமின்றி... கணவர் எடுத்த விபரீத முடிவு

கலாதரனும் அவருடைய தாய் உஷாவும் விஷம் குடித்தும் பின்னர், தூக்கு போட்டும் தற்கொலை செய்து உள்ளனர்.
கேரளாவில் பரிதாபம்; பிரிந்து வாழும் மனைவியிடம் குழந்தைகளை ஒப்படைக்க மனமின்றி... கணவர் எடுத்த விபரீத முடிவு
Published on

கண்ணூர்,

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பய்யனூர் கிராமத்தில் ராமன்தளி பகுதியை சேர்ந்தவர் உஷா (வயது 56). இவருடைய மகன் கலாதரன் (வயது 36). இவருடைய மனைவி நயன்தாரா. இந்த தம்பதியின் மகள் ஹிமா (வயது 6), கண்ணன் (வயது 2).

இந்நிலையில், மனைவி நயன்தாரா 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்க கோரி போலீசை அணுகியுள்ளார். இந்த வழக்கில், குழந்தைகளை நயன்தாராவிடம் ஒப்படைக்கும்படி கோர்ட்டு ஒன்று உத்தரவிட்டது. இதற்காக நேற்று முன்தினம் போலீசார் கலாதரனை தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் வரவில்லை.

இதனால், சம்பவ பகுதிக்கு சென்று பார்த்தபோது கலாதரன், அவருடைய தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்து கிடந்தனர். இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதில், பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து, குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த அறையில், பாலும், பூச்சிக்கொல்லி மருந்தும் கலந்த பாட்டில் ஒன்று கிடந்துள்ளது.

குழந்தைகளின் உடல்களுக்கு நடந்த பிரேத பரிசோதனையில் அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இதன்பின்னர் கலாதரனும் அவருடைய தாய் உஷாவும் விஷம் குடித்தும் பின்னர், தூக்கு போட்டும் தற்கொலை செய்து உள்ளனர் என போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். அனைவரின் உடல்களையும் போலீசார் உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். தற்கொலை குறிப்பு ஒன்றும் அந்த பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com