80-களின் ரெட்ரோ ஏஐ டிரெண்டிங்கில் இணைந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல்

ஏஐ, ஜெமினி, சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
80-களின் ரெட்ரோ ஏஐ டிரெண்டிங்கில் இணைந்த மத்திய மந்திரி பியூஷ் கோயல்
Published on

டெல்லி,

80-களின் ரெட்ரோ ஏஐ டிரெண்டிங்கில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் இணைந்துள்ளார்.

ஏஐ, ஜெமினி, சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் சமூகவலைதளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த செயலிகளை பயன்படுத்தி மக்கள் தங்கள் புதிய புகைப்படங்களை பதிவிட்டு அதை 1980ம் ஆண்டுகளில் எவ்வாறு இருப்போம் என்பது போன்ற புகைப்படங்களை உருவாக்கி அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ரெட்ரோ டிரண்டிங்கில் பியூஷ் கோயல்

பொதுமக்கள், நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் ஏஐ மூலம் உருவாக்கப்படும் இந்த 80-களின் ரெட்ரோ புகைப்படங்களை தங்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட 1980-களின் ரெட்ரோ புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com