"அதற்கு நான் தயார்.." - மத்திய மந்திரி பியூஷ் கோயல் சவால்

அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.
"அதற்கு நான் தயார்.." - மத்திய மந்திரி பியூஷ் கோயல் சவால்
Published on

புது டெல்லி,

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நலன்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளதாக விளக்கினார். இதுதொடர்பாக அவர் பேசுகையில்,

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நாட்டின் விவசாயிகள், சிறு தொழில்கள் மற்றும் உள்நாட்டு தொழிற்துறைகளின் நலன்களை பாதிக்கும் எந்த உடன்படிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை,” என்றார்.

மேலும், "அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். இதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் எரிசக்தி, விமானப் பாகங்கள், செமி-கண்டக்டர் சிப்கள் உள்ளிட்ட 500 பில்லியன் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்தியா உறுதி" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com