விமான விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு

விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
விமான விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து பற்றி ஏர் இந்தியா வெளியிட்ட செய்தியில், அகமதாபாத்தில் இருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர். இந்த நிலையில் தற்போது வரை 204 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com