மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் மத்திய மந்திரி வலியுறுத்தல்

மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள் என பொதுமக்களை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார்.
மரக்கன்று நட்டு செல்பி எடுத்து கொள்ளுங்கள்; பொதுமக்களிடம் மத்திய மந்திரி வலியுறுத்தல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றபின் பிரதமராக மோடி கடந்த மே 30ந்தேதி பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக கடந்த சனிக்கிழமை பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பேற்று கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, சுற்றுச்சூழல் விவகாரங்களை எதிர்கொள்வதில் மக்களின் பங்கு அவசியம். இது மக்களின் இயக்கம் ஆக வேண்டும் என கூறினார்.

வருகிற 5ந்தேதி உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் நாட்டு மக்கள் ஆர்வமுடன் பங்கு பெறுவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர்கள் மரக்கன்று ஒன்றை நட்டு விட்டு, அதனுடன் புகைப்படம் ஒன்று எடுத்து கொள்ளுங்கள். பின் அதனை #SelfieWithSapling என்று சமூக வலைதளத்தில் பதிவிடுங்கள். இதுபோன்ற தொடக்க விசயங்கள் நமக்கு தேவை என்று கூறினார்.

சுற்றுச்சூழல் என்பது அரசின் திட்டம் மட்டுமல்ல. அது மக்களின் திட்டமென்று மோடி அரசு நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு இந்த வருடம் ஜனவரியில், வருகிற 2024ம் ஆண்டுக்குள் காற்று மாசுபாட்டை குறைக்க தேசிய தூய்மை காற்று திட்டத்தினை தொடங்கி வைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com