

புதுடெல்லி,
கொரோனாவால் குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும், அந்த பிளாஸ்மாவை கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி குணப்படுத்தலாம் என்றும் சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை, டெல்லியில் 4 நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் முதல்கட்ட முடிவுகள் ஊக்கம் அளிப்பதாகவும், நோயாளிகளின் உயிரை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அடுத்த 2 நாட்களுக்கு இதேபோன்று சிகிச்சை நடத்தப்படும். அதன்பிறகு எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் பயன்படுத்த மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்கப்படும். இதற்காக, குணமடைந்தவர்கள், தங்கள் பிளாஸ்மாவை தானமாக தர வேண்டும் என்றார்.