திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம்

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #nationalanthem | #supremecourt
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை: உச்ச நீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், தேசிய கீதம் திரையரங்குகளில் கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிராக பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய கீதம் எங்கு இசைக்கப்பட்டாலும் அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து மத்திய அரசு அமைக்கும் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தேசிய கீதத்தை அவமதிப்பு செய்வதை தடுக்க சில பரிந்துரைகளை அளிக்க 12 பேர் அடங்கிய குழு அமைப்பதாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தை ஏற்றுக்கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#nationalanthem | #supremecourt

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com