இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து


இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 21 Jan 2026 9:30 AM IST (Updated: 21 Jan 2026 10:00 AM IST)
t-max-icont-min-icon

பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா 1972-ம் ஆண்டு ஜனவரி 21-ந்தேதி தனி மாநில அந்தஸ்து பெற்றது. இதனை முன்னிட்டு திரிபுரா மாநில தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில், திரிபுரா மாநில தினத்தில் மாநில மக்களுக்கு என் இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது.

அந்த மாநிலம் பல்வேறு துறைகளில் முன்னோடியான மாற்றங்களை கண்டுள்ளது. அந்த மக்கள், நாட்டின் வளர்ச்சி பாதைக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கின்றனர் என தெரிவித்து உள்ளார். வருங்காலங்களில், திரிபுரா முக்கியத்துவம் வாய்ந்த நலன்களை பெற வேண்டும் என நான் வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story